வன்னியில் பால் கொள்வனவை நிறுத்திய தனியார் நிறுவனம் : மக்கள் அசோகரியம்

மாந்தை கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் காலை நேரப்பால், மாலை நேரப்பால் என இரு தடவைகள் பெற்கொள்ளும் முறையை நெஸ்லே தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அப் பிரதேச மக்களும் அவ்வாறே அந்த நிறுவத்திற்கு வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு தங்களின் நாளாந்த வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கோடு வங்கிகளில் கடனை பெற்று பால் மாடுகளை கொள்வனவு செய்து பால் விநியோகத்தை நாளோன்றுக்கு இரு தடவைகள் மேற்கொண்டு வந்தனர்.

தற்போது நெஸ்லே தனியார் நிறுலனம் மாலை நேரப் பாலை கொள்வனவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக  பாண்டியகுளம், செல்வபுரம், சிதம்பரபுரம் உட்பட பல கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் மாலை நேர பாலை என்ன செய்வதென்று தெரியாது தாங்கள் திண்டாடிக்கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண நெஸ்லே தனியார் நிறுவனத்துடன் தொலைபேசி மூலமாக வினாவ முற்பட்ட போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாலின் வருமானத்தினை நம்பி தவணை முறையில் பெற்றுக்கொண்ட குளிரூட்டிக்கான மாதாந்த வட்டிப்பணத்தினையும் அதிக பாலை வழங்குவதற்காக விலையுயர்ந்த தரமான பால் மாடுகளை வாங்குவதற்காக வங்கியில் பெற்ற கடனையும் செலுத்த முடியாமல் உள்ளோம். கடன் சுமை அதிகரித்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம் என தெரிவித்தனர்.

பால் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாதிக்கப்பட்ட மக்களால் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதி அவைத்தலைவர் , வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் , முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் , மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் , மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரி, நெஸ்லே நிறுவனம் ஆகியவற்றிக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள், நெஸ்லே தனியார் நிறுவன உயர் அதிகாரிகளே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது வன்னி மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்

You might also like