வவுனியா A9 வீதியில் பயணிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து-நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள புதிய தனியார் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சாலையோரங்களில் உள்ள நீண்ட காலமாக உயிர் வாழ்ந்த மரங்கள் வீதி அபிவிருத்தியின் போது பட்டுப்போன நிலையில் மரங்கள் தற்போது வீதியோரங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு அபயகரமானதாக மாறியிருக்கின்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பட்டுப்போன மரங்களின் கிளைகள் அவ்வப்போது காற்றுக்கு உடைந்து விழுந்துக் கொண்டு இருக்கின்றன. பாரிய காற்று வீசும் போது இம் மரங்களின் பெரிய கிளைகள் முறிந்து விழுமாயின் இவ் பிரதான வீதியில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

வவுனியாவில் தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சூழலில் இம் மரங்கள் முறிந்து விழுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கும் மக்கள் இம் மரங்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

You might also like