வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சிரமதானப் பணிகள்

வவுனியா – தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் சிரமதானப் பணிகள் நாளை மறுநாள் (16.09.2017) இடம்பெறவுள்ளன.

குறித்த வேலைத்திட்டம் சனிக்கிழமை (16.09.2017) காலை 8.30 மணியிலிருந்து 11.00 மணி வரையும் நடைபெறவுள்ளன.

அத்துடன், சிரமதானப் பணியில் இணைந்து கொள்வதற்கும், மாணவர்கள் நடமாடும் பகுதிகளில் புற்கள், பாத்தீனியச் செடிகள் குடிகொண்டுள்ளதால் அதனை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பினை வழங்குமாறும் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் கோரியுள்ளார்.

சிரமதான வேலைக்குரிய உபகரணங்களான கத்தி, மண்வெட்டி, புல்லுவெட்டி, போன்ற உபகரணங்களுடன் சமூகமளிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சிரமதானப் பணியில் பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

You might also like