கமநலசேவை உத்தியோகஸ்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கு உரமானிய பயிற்சி நெறி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பயிற்சி நெறி மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக கொடுக்கும் நடைமுறைக்குரிய கணனிப் பயிற்சி நெறியில் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் கமநல சேவை உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த பயிற்சி நெறியில் தேசிய உரமானிய செயலகத்தை சேர்ந்த உதவிப் பணிப்பாளர் கபில திசநாயக்கா மற்றும் தேசிய உரமானிய செயலகத்தின் வவுனிய மாவட்ட உதவிப்பணிப்பாளர் விஜயவர்த்தன மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணனி மென்பொருள் பொறியியலாளர் திலீப் வளவாளராகவும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like