சற்று முன் வவுனியா நெளுக்குளத்தில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் காயம்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (14.09.2017) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நெளுக்குளம் வயல்வெளிக்கு அருகே முச்சக்கரவண்டியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதியதுடன் பனை மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான யசோதன் ( வயது – 27) என்பவரும் முச்சக்கரவண்டியில் பயணித்த சன்ஜன் (வயது -27) என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like