குடும்பத்தகராறு காரணதாக 2வயதுடைய குழந்தையின் தந்தையான இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

மதவாச்சி , பிம்பியகொள்ளாவ பகுதியில் இன்று (14.09.2017) மாலை 4.30மணியளவில் குடும்பத்தகராறு காரணமாக 23வயதுடைய இளைஞனேருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மதவாச்சி , பிம்பியகொள்ளாவ பகுதியில் வசித்து வரும் சிசிர குமார (வயது-23) , அவரது மனைவிக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டை வீட்டு வெளியேறிய சிசிரகுமார என்ற இளைஞன் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.குறித்த நபர் 2வயதுடைய பிள்ளையின் தந்தையாவர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like