இலங்கை வீரர்கள் பங்கேற்ற கிரிக்கட் தொடர் – மைதானத்திற்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தான் – காபுல் நகரில் ரி-ருவென்ரி கிரிக்கட் போட்டி நடத்தப்பட்ட மைதானம் ஒன்றுக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதிலில் பொலிஸார் உட்பட மூவர் உயிரிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்பவற்றிற்கு பெயர் போன ஆப்பாகினிஸ்தானில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அண்மையில் ரி-ருவென்ரி கிரிக்கட் தொடர் ஆரம்பமானது.

இந்த தொடரில் உள்நாட்டு வீரர்களுடன், பெருமளவிலான வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று வருகின்றனர்.

அங்கு தொடர்ச்சியாக போட்டிகள் நடத்தப்படுகின்ற நிலையில், தற்கொலை குண்டுதாரி, போட்டி நடத்தப்பட்ட மைதானத்திற்கு அருகில் சென்ற போது, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது, தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்துள்ளார். என்றபோதிலும், இந்த தாக்குதலால் வீரர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொடரில் இலங்கை வீரர் அசான் பிரியன்ஞன் Band-E-Amir Dragons அணிக்காக விளையாடுகின்றார்.

அத்துடன், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது Boost Defenders vs Mis-E-Ainak Knights அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்ததுடன், இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் பந்து வீச்சளர் கிரகம் லெப்ரோய் போட்டி நடுவராக செயற்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரர்களான மஹ்ரூப் மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You might also like