வவுனியாவில் மாவட்ட மட்ட முதியோர் தின விளையாட்டுப் போட்டி

ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மட்ட ரீதியிலான விளையாட்டுப்போட்டி இன்று (15.09.2017) வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெற்றது.

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் வேகநடைபோட்டியும் ஏனைய போட்டிகள் அலுவலக வளவிலும் நடைபெற்றன. வேகநடை, தண்ணீர் நிரப்புதல், கிடுகுபின்னுதல், பலூன் ஊதி உடைத்தல், சங்கீதக்கதிரை ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் வவுனியா வடக்கு ,வவுனியா நகரம் ,வவுனியா தெற்கு பிரதேச செயலகம் சார்ந்த முதியோர்கள் பங்குபற்றினர் .சுவாரசியமாக நடைபெற்ற இப்போட்டி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

சமூகசேவை உத்தியோகத்தர்களான ந.பாலகுமார் திருமதி விமலேந்திரன் செல்வி ச. சோபனா ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செல்வி தி .கலைவாணி ,திருமதி ஜே. செல்வமலர் திருமதி எஸ்.கலைவாணி திருமதி ப.கோமளா திரு.எஸ்..கே.வசந்தன் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினர் .

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாகாணமட்ட முதியோர் தின நிகழ்வுகளில் வைத்து பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

You might also like