வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் இராஜலிங்கம் பிணையில் விடுவிப்பு

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி  வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இளைஞர் ஒருவர் கனடா செல்வதற்காக முகவர் ஒருவருடன தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். குறித்த முகவர் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு குறித்த இளைஞரின் வெளிநாடு செல்வதற்கதான பணத்தினை வைப்புச் செய்யுமாறு கோரியுள்ளார். அந்த இளைஞனும் அவ்வாறே வைப்புச் செய்த நிலையில் முகவரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாது ஏமாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பணத்தை மீள பெறுவதற்கு இளைஞர் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயனளிக்காமையால் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா வர்த்தச சங்கத் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு  நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜராகாமையால், இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவரது வழக்கு விசாரணைக்கு வந்த போதே இரண்டு பேரின் சரீர பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like