கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப்பகுதியில் பனை மரத்திலிருந்து சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப்பகுதியில் நேற்றைய தினம் (15.09.2017) பனையில் ஓலை வெட்ட ஏறியவரிற்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பனை மரத்திலேயே மரணமடைந்தார்.

குறித்த சம்பவத்தில் கஜேந்திரன் , வயது 44 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப்பகுதியில் நேற்னைய தினம் பனையில் ஓலை வெட்டும் நோக்கில் பனையில் ஏறியவரிற்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பனை மரத்தின் வட்டுப் பகுதிக்குச் சென்று அமர்ந்துள்ளார். இருப்பினும் பனை மரத்தின் உச்சியிலேயே மரணமடைந்தார்.

இவ்வாறு மரணமடைந்தவரின் உடலம் உடனடியாக ஏனையவர்களின் உதவியுடன் கீழே இறக்கப்பட்ட மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவரின் உயிர் பிரிந்திரிந்த்தனை வைத்தியர்கள. உறுதி செய்தனர்.

மரண விசாரணையின் பொருட்டு சடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. –

You might also like