கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடுநர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் எடுத்துரைத்துள்ளனர்.

இருதரப்பு விசாரணைகள் நிறைவு பெற்றதை அடுத்து குறித்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கனகபுரத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கல்லறை கட்டுவதற்கு
முயற்சித்த போது, அந்த செயற்பாடுகளை பிரதேச சபை தடுத்து நிறுத்தியது.

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பில் 6 பேருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கரைச்சி பிரதேச சபையினால்
வழக்கு தொடரப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பின்னர் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like