20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியில் வறட்சியால் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையின் காரணமாக கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளும் பாதிப்புக்குள்ளதாக மாவட்ட அனர்த்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிளைப்பள்ளி மற்றும் பூனகரி ஆகிய பகுதிகளில் 6 ஆயிரத்து 796 குடும்பங்களை சேர்ந்த 22 ஆயிரத்து 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த நிலையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கண்டாவளை செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 296 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 503 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பூனகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நாடுமுழுவது 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like