வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று 20-01-2017 பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் வளாக முற்றலில் பொங்கல் பானை வைத்து பிரதேச செயலகத்தின உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் அரிசியிட்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர் அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் பிரதேசசெயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் மாணவர்களின் .இசைக்கச்சேரி மற்றும் சிதம்பரபுரம் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பொங்கல் நிகழ்வில் எமது கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் நம் நாட்டு கலைஞனும் பாடகனுமான கந்தப்பு ஜெயந்தனால் எழுதி பாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பாடல் ஒன்றும் கந்தப்பு ஜயந்தனால் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தில் வளாகத்தில் அமைந்துள்ள கோவிலில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் பொங்கல் பிரசாதமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்களான வீ.பிரதீபன் மற்றும் இ.நித்தியானந்தன், தமிழ் மணி அகளங்கள்,கலாபூசனம் சிவசோதி, தமிழ் விருட்சம் தலைவர் மற்றும் செயலாளரான சந்திரகுமார் (கண்ணன்) மற்றும் மாணிக்கன்ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

You might also like