வவுனியாவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் இன்று (17.09.2017) பிற்பகல் 12.30 மணியளவில் குளவி கொட்டிற்கு இலக்காகிய நிலையில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை விளாத்திக்குளம் செல்லும் வீதியுள்ள மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான சந்திரமோகன் மங்கயற்கரசி ( வயது – 32) , ஒமந்தை மத்திய கல்லூரி மாணவர்களான தமிழரசன் சுருதிகா ( வயது – 11) , காண்டீபன் சனோஜன் (வயது -11 ) ஆகிய மூவர் மீது மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like