சற்று முன் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றம்

கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக  இந்த வாள்வெட்டு சம்பவம் ஏற்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார்  குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இதனையடுத்தே அங்கு பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like