வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இன்று (19.09.2017) காலை 11.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உட பொலிஸ் பரிசோதர்களான சுபசிங்க, டினேஸ் ஆகியோர்களின் தலமையில் பொலிஸ் கொஸ்தாபர்களான அருண (43210) , கேரத் (40117) , பண்டார (14957) , சமரதுங்க (52389) , சரங்க (60249) , குமார (66701) ஆகியோரின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவினை அனுராதபுரத்திற்கு கடந்த முயன்ற 34வயதுடைய நபரை வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையில் வைத்து இன்று (19.09.2017) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like