வவுனியாவில் பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டப நிலையம் திறப்பு விழா

வவுனியா கற்குழியில் இன்று (20.09.2017) காலை 9.30 மணியளவில் ஆசியாவிற்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதம இயக்குனர் வைத்திய கலாநிதி நிர்மலா , கஜாரியா பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபத்தினை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்ததுடன் நினைவுப் பெயர்ப்பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், இலங்கைக்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளர் திரு. கணேஷ், யாழ்ப்பாண நிலையத்தின் சகோதரி றஞ்சி, வவுனியாவிற்கான நிலையத்தின் சகோதரி திருமணி, வவுனியா நிலைய சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மன ஆற்றுப்படுத்தும் தியானங்கள் இந்த மண்டபத்தில் தினசரி காலை மாலை என இரு நேரமும் இலவசமாக இடம்பெறுவதுடன் இன மத சமய கலாச்சார வேறுபாடின்றி தியான நடவடிக்கைகளில் அனைத்து மக்களும் ஈடுபடலாம் என்று நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

You might also like