வவுனியா கோவிற்குளத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு

வவுனியா கோவில்குளம் தபால்பெட்டிச் சந்திக்கு அருகே இன்று (20.09.2017) மதியம் 12.30மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை துவிச்சக்கரவண்டியில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோவில்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உமாமகேஸ்வரன் வீதியினூடாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கீழே தள்ளி விட்டு அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை அபகிரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் முகத்தை காணாதவாறு மூடிய தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகவும், சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணி பொலீசாருக்கு தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்ட நபர் முழுமையாக முடியவாறு தலைக்கவசத்தினை அணிந்திருந்ததாகவும் சிவப்பு நிற ஆடைகள் அணிந்திருந்ததாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் சிசீடிவி கேமரா தரவுகளை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like