வவுனியா சிதம்பரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவினரும், ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று (20.09.2017) பிற்பகல் 2.00மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 3ஆம் பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தித்தில் இடம்பெற்றது

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களின் பூரண ஆதரவுடன் இடம்பெற்ற  மருத்துவ முகாமில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிஷப் , கற்குளம் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் , மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like