ப்ளூவேல் விளையாட்டின் மிரட்டல்… தற்கொலை செய்யத் துணிந்த பெண்ணின் குமுறல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் 17 வயது பெண் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டால் இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை ஜவானின் மகளான இவர் முதலில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யத் துணிந்த போது காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்பு இரண்டாவது முறையாக அதிகமான தூக்க மாத்திரையினை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து அப்பெண் கூறுகையில், இந்த விளையாட்டினை குறித்த தகவல்கள் போலியாக இருக்கும் என்று நினைத்த இவர் வாட்ஸ்அப் மூலம் விளையாட்டில் இணைந்தததாகவும், பின்பு தனது கையில் திமிங்கலம் வரையச் சொன்னது.

பின்பு தற்கொலை செய்ய கூறியது. நான் தற்கொலை செய்யவில்லை எனில் எனது தாய் இறந்து விடுவார் எனக் கூறியதால் தான் நான் இவ்வாறு செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

You might also like