வவுனியா பேருந்து நிலைய பிரச்சினைக்கு திங்கட்கிழமை முடிவு..!

அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று (21.01.2017) மாலை 5 மணி முதல் இரவு ஒன்பது மணிவரையிலும், பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்றை சந்திப்பின் போது அரச, தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவு எடுத்துள்ளனர்.

அத்துடன், மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு இன்றைய நீண்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதுவரையிலும், எதுவித இடையூறுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவேண்டாம் என்று இன்றைய கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரச, தனியார் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like