வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு

வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அலுவலகம் நேற்று (22.09.2017) மாலை 5.00மணியளவில் துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வை.றதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வி.மிதுலன், பாடசாலை துடுப்பாட்ட அபிவிருத்தி குழு தலைவர் சுந்தராங்கன் , நடுவர்சங்க உபதலைவர் சுதாகரன் , துடுப்பாட்ட சங்க உறுப்பினர் கழக உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் உரையாற்றி வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர்,

எமது மாவட்டத்தின் துடுப்பாட்ட துறையை பாடசாலை மட்டத்திலும் மற்றும் கழக மட்டத்திலும் விருத்தி செய்து தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டுசெல்லும் நோக்கோடு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது . வடமாகாணத்தில் தனியொரு விளையாட்டுத்துறைக்கு அலுவலகம் திறப்பது இதுவே முதற்தடவை என தெரிவித்தார்.

You might also like