வவுனியாவில் சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பினால் ( International Youth Alliance for Peace) தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு நாடாளாவிய ரீதியால் 20 மாவட்டங்களில்  சர்வதேச சமாதான தினமான செப்டெம்பர் மாதம் 21ம் வியாழக்கிழமை பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு  நடாத்தப்பட்டது.

இளைஞர் சமாதானத்தை கட்டியெழுப்பல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம், திருஞானசம்பந்தர் வித்தியாலயம், பூந்தோட்டம் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய 05 பாடசாலைகளை சேர்ந்த 391 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

சர்வதேச சமாதான தினத்தை கொண்டாடுவதுடன் மட்டுமன்றி பல்வேறுபட்ட சமூக பின்னணியைக் கொண்ட இளைஞர்களிடையே சமாதானம் குறித்த அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதொரு சிறந்த தளத்தை உருவாக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணர் மன்றம், வவுனியா மாவட்ட  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், றொட்றிக் கழகம் , தமிழ் தேசிய இளைஞர் கழகம்  ஆகிய   இளைஞர் அமைப்புக்களின் ஆதரவுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like