கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் விஜயகலாவின் உதவித் திட்டங்கள்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்டநிதியிலிருந்து ஒரு தொகை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இராஜாங்க அமைச்சரால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 13 இலட்சத்து 25ஆயிரம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது, பொது அமைப்புகளிற்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கிளிநொச்சி பொன்னகரில் அமைந்துள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் 4 இலட்சம் பெறுமதியில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like