கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலில்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலம் காணப்படும் பகுதி பாழடைந்த கட்டட பகுதியாகும். குறித்த பகுதியில் நச்சு மருந்து மணம் வீசுவதை அவதானிக்க முடிந்தது, குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

You might also like