வவுனியாவில் கோலாகரமாக நடைபெற்ற அக்கினி சிறகுகள் அமைப்பின் கன்னி மாநாடு

அக்கி சிறகுகள் அமைப்பின் முதலாவது மாநாடு இன்று (24.09.2017) காலை 9.30 மணிக்கு வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அரவிந்தன் அவர்களின் தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றுடன் ஆரம்பான இந் நிகழ்வில் மாணவி பிரியந்தினி அவர்களின் வரவேற்பு நடனம் , புத்தகம் வெளியீடு , பாடல் வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் , சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் , வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தேவராசா, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் சுகாதார அமைச்சரின் செயலாளர் பா.சிந்துஜன், வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவர் ஜோன்சன் (தேவா) , வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ராஜன், இலக்கிய ஆர்வளர் மேழிக்குமரன் , தாமரை வெளியிட்டகத்தின் பணிப்பாளர் சந்திரபத்மன், அக்கினி சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இளைஞர் யுவதிகளை கொண்ட இவ் அமைப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like