வவுனியா மாவட்ட செயலகத்தில் புகைப்படம் பிடித்த இரு அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை புகைப்படம் எடுத்த இரு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மீது விசாரணைகளை இடம்பெற்று வருகின்றன.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு அரசாங்க அதிபரினால் அழைப்பு விடுக்கப்படும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

ஆனால் கடந்த 11.09.2017ம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு இரு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பங்கு பற்றியதுடன் கூட்டத்தினை புகைப்பட கருவி மூலம் ஒளிப்பதிவும் மேற்கொண்டனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கு அமைய குறித்த இரு உத்தியோகத்தர்களுக்கும் கூட்டத்திற்கு செல்ல அனுமதி வழங்கியது யார்? , கடமைக்கு செல்லாது இங்கு ஏன் வந்தார் என விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வவுனியா மாவடத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் , ஊழல் இடம்பெற்று வருகின்றமையடுத்து கொழும்பு தலமைக்காரியாலயத்தினால் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like