வவுனியாவில் திலிபனின் நினைவு தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம்

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலிபன் (பார்த்திபன் இராசையா) 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து மரணம் எய்தினார். 

அவரின் நினைவு தினைத்தினை முன்னிட்டு வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று (25.09.2017) காலை 9.30மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு மீண்டும் போராட்ட இடத்திற்கு சென்று (25.09.2017 / 26.09.2017) ஆகிய இரு நாட்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றுடன் 214வது நாளாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக தமது உறவுகளை தேடி வெயில் , மழையினை பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like