வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் மழலைகள் விளையாட்டு விழா – 2017

வடமாகாண ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு, கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழலைகள் விளையாட்டு விழா – 2016 இன்று (25.09.2017) மதியம் 2.30மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினர் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன்  தடை தாண்டிப் பாய்தல், வட்டத்தில் நீர் நிறைத்தல், குளத்தில் மீன் பிடித்தல் , கோபுரம் அமைத்தல், வளைய அஞ்சல், பந்து பரிமாறல், கூடையில் பந்து போடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன.

கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவிந்திரன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசிலன் , அதிதிகளாக வவுனியா வலயக்கல்விப்பணிப்பாளர் இராதகிருஸ்னன் , வவுனியா வலய பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like