வறட்சியின் அகோரம்! ஈடு கொடுக்க வேட்டையடைப்பான் குளம் பகுதி விவசாயிகள் திண்டாட்டம்

கிளிநொச்சி வேட்டையடைப்பான் குளம் பகுதி விவசாயிகள் வறட்சி நிலையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் பல ஏக்கர் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய வயல்களை பாதுகாப்பதில் தற்பொழுது விவசாயிகள் தீவிர முயற்சி எடுத்துள்ளனர்.

எளிமையான விவசாயிகள் தம்மிடம் உள்ள சிறிய வசதிகளை கொண்டு பல ஏக்கர் நிலங்களை பாதுக்க எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக கோயில் குழாய் கிணறு ஒன்றில் இருந்து சிறிய மின்சாரமோட்டரின் உதவியுடன் சுமார் 500M தூரத்தில் காணப்படும் வேட்டையடைப்பான் குளத்தின் சுரிசுக்கு நீரைப் பாய்ச்சுகின்றனர்.

தமது கிராமத்தில் கிணற்றில் இருந்து குளத்திற்கு நீரைப் பாய்ச்சவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலை ஏற்படுவது இதுவே முதல் தடவை என பரம்பரை விவாசாய குடிமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like