வவுனியாவில் விவசாய தொழில் முனைவோரை ஊக்கிவிக்கும் மாநாடு

விவசாய தொழில் முனைவோரை ஊக்கிவிக்கும் மாநாடு இன்று (21.01.2017) காலை 9.30மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதி அணுசரணையில் விவசாய துறையை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இவ் மாநாடு நடைபெற்றது.

இதன்போது விவசாயிகளின் உற்பத்திகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் அவர்களது உற்பத்திகளை அதிகரிக்க ஆலோசனை வழங்கல், நிதி வழங்கல் தொடர்பான தெளிவுபடுத்தும் கருத்துரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் ரோஹண கமகே, ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like