கிளிநொச்சி திருநகர் பகுதியில் அப்பள உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சிதிருநகர் பகுதியில் அப்பள உற்பத்தி நிலையம் இன்று (25.09.2017) பா.உ சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட  குறித்த அப்பள உற்பத்தி தொழிற்சாலை திறக்கும் நிகழ்வில் சேனாதிராஜா, சிறிதரன் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எடுக்கப்பட்ட தீர்வுகளினடிப்படையில் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கமைய அரசு அழுத்தத்திற்கு உள்ளாக அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவது தொடர்பில்  பா உ சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,

வலி வடக்கு பிரதேசம் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் தலைமைதாங்கிய தொகுதி முழுமையாக  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் நாம் எடுத்த முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். 90 ஆயிரத்திற்கு அதிகமான பெண்தலைமைத்துவ குடும்பங்களும் , உணவு ஊட்டச்சத்துள்ளாத குழந்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதற்காக பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார். போராளிகள், அங்கவீனர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக இங்கேயே வேலை வாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

You might also like