வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு அனுமதியில்லை

வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள்  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைய முறையான அனுமதி பெறப்படாமலேயே  இயங்குவதாக தெரிவித்து  நகரசபை செயலாளர்   இ.தயாபரன் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையின் முன்னால் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் தலமையில் முன்னால் நகரசபை உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், பள்ளிவாசல் பரிபாலன சபையினர் ஒன்றிணைந்து (19.12.1995) ம் ஆண்டு கூட்ட தீர்மானத்தின்படி பளிவாசலுடன் இணைந்த 14 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைய முறையான அனுமதி பெறப்படாமலேயே அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனுமதியற்ற வர்த்தக கட்டிட உரிமையாளர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினை நகரசபையிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகாரசபையானது முகாமைத்துவ சபை பத்திர இலக்கம் 21/2016 ன் அங்கீகாரத்தின் மூலம் 01.02.2017 ம் திகதியிலிருந்து மீளப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக இதற்கு சட்டநடவடிக்கை எடுக்க இயலாமல் காணப்பட்ட நிலையில் பள்ளிவாசலுடன் இணைந்த 38கடைகளின் உரிமையாளர்கட்கு எதிராக உரிய நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அதற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பையும் நகரசபை வழங்கும் என்றும் 03.04.2017 அன்று நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு என்னால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

 எனினும் குறித்த கடை உரிமையாளர்கள் மீது நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் எதுவித நடவடிக்கையும் மேற்கொண்டது தொடர்பில் அறியத்தரப்படவில்லை.

இதேவேளை நகரசபையாக எம்மால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லையென்பதை அறியத்தருவதோடு நகர அதிகாரசபையினரே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அறியத்தருவதாக மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like