வவுனியாவில் பாடசாலை அதிபரின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை

வவுனியா – சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று (25.09.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு இன்று (26.09.2017) கல்வி வலயத்தினால் பாடசாலை பரீட்சிப்புக் குழு செல்ல இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள், கோவைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.

அத்துடன் அலுவலகத்தின் முன்பக்க கதவை இரும்புக் கம்பியால் உடைப்பதற்கு எத்தணிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like