வவுனியாவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பொலிஸாரை கௌரவிக்கும் நிகழ்வு

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வவுனியா மாவட்ட பொலிஸாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (26.09.2017) காலை 10.00மணியளவில் மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட உதவிபொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோன் கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 21 பொலிசாருக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி எஸ்.ஐ. அசோக்க 1 இலட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை அதிகபட்ச வெகுமதியாக பெற்றுக்கொண்டிருந்தார்.

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய பொதுமகன் ஒருவருக்கும் 5 ஆயிரத்து 500 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

பொலிசாருக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் கலை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிசாருக்கு வவுனியா மாவட்ட உதவிபொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன் மற்றும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோன் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

You might also like