வவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கிடையே மோதல் : மூவர் கைது

வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் இன்று (26.09.2017) காலை 10.30மணியளவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் ஒரு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூன்று மாணவர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த சில வாரங்களாக இரு மாணவ குழுக்களுக்கிடையே சமூக வலைத்தளமான முகநூலில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு இன்று பாடசாலை இடைவேளையின் போது கைகலப்பாக மாறியது. இதன் போது மூன்று மாணவர்கள் சேர்ந்து தரம் 12 இல் கல்வி கற்கும் சிவராசா சிவபேருசன் என்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட மூன்று மாணவர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட மாணவர்களும் தாக்குதலுக்குள்ளான மாணவனும் சமாதானமாக செல்வதாக இருந்தால் பொலிஸ் நிலையத்துடன் இவ் விசாரணையினை நிறுத்திக்கொள்வதாகவும் இல்லையேனில் விசாணையின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

You might also like