தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே – சத்தியசீலன்

தேசிய மட்டத்தில் சாதித்து பதக்கங்களை வென்றமையானது கிளிநொச்சிக்கு பெருமையான விடயம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

2016 இடம்பெற்ற போட்டிகளில் தேசிய மட்டத்தில் மேசை பந்து போட்டியில் தங்கப்பதகம் வென்றமை மற்றும் ஏனைய போட்டிகளிலும் வெள்ளி வெங்கல பதக்கங்களை வென்ற மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக றோல் போல் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதனை முதல் முதலாக நேரடியாக பார்க்கும்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தந்த ஏற்பாட்டாளருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் 2016 இல் தேசிய மட்டத்தில் மேசை பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி பாலகிருஸ்னண் தனுசியா,தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதகம் வென்ற ரசீந்திரன் தமிழ்மகள், மற்றும் கோலுன்றி பாய்தலில் வெங்கலப் பதக்கம் வென்ற யோநாதன் சுகிர்தா ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் பாராட்டத்தக்கது.

மேலும் பிள்ளைகளின் விளையாட்டுகளுக்கு பெற்றோர் அதிக ஊக்கத்தை வழங்கி வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியது.

இந்த விளையாட்டு வீரர்களை நான் மனதார பாராட்டுகிறேன். குறிப்பாக றோல் போல் விளையாட்டில் இலங்கையின் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவர்கள் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெறுகின்ற உலக றோல் போல் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

அவர்களுக்கும் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என மேலும் தெரிவித்தார்.

You might also like