வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் முதியோர் கௌரவிப்பு

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு 19.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு பாடசாலைமைதானத்தில் முதியோர் விழிப்புணர்வும் கௌரவிப்பும் பாடசாலைஅதிபர் திரு .க . சிவநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் மூத்த குடிமக்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் விழிப்புணர்வு செயல்திட்டங்களை சிறப்பாக வருடாந்தம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் இன்று நெளுக்குளம் முதியோர் சங்க தலைவர் உள்ளிட்ட பிரதான நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்களால் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் .

இதில் தலைவர் வைத்திய கலாநிதி கந்தையா இராமச்சந்திரன் ,திரு எஸ் . குமாரசாமி ,திரு.என். நடராஜா , திரு க. அன்னலிங்கம் , திரு.மு. நாகேஸ்வரன் திருமதி எஸ். மனோன்மணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பித்தனர் .

நிகழ்வின் சிறப்புரையை வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரும் நிகழ்வின் சிறப்புப் பேச்சாளருமான இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் ‘ மூத்தோர் வாயும் முதுநெல்லிக்காயும் ‘ என்ற தலைப்பில் நிகழ்த்தினார் .

இறுதியில் நன்றியுரையை பாடசாலை ஆசிரியர் திருமதி சோ.தேவிகா நிகழ்த்தினார் .

You might also like