வன்னியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  மாங்குளம்  வீதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால்  அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாக  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  மாங்குளம்  வீதியில் அண்மைய நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த்துள்ளதாகவும் மாலை மூன்று மணிக்கே யானைகள் வீதி ஓரத்தில் நடமாடுவதாகவும் வீதியில் செல்பவர்களை துரத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலைகளின் நிமித்தம் செல்லும் பெண்கள்,  மீண்டும் வீடுதிரும்பி செல்லும் வேலையில் அச்சத்துடன் செல்வதாகவும் வீதியோரம் காணப்படும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கூறுகின்றனர்.

You might also like