ஒட்டு மொத்த சர்வதேசத்தின் பார்வை யாழின் மீது! வித்தியா படுகொலையின் தீர்ப்பு இன்று

இன்று முழு உலக நாடுகளினதும் ஒட்டு மொத்த பார்வையும் இலங்கையின் மீதே திரும்பியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மீது அனைவரதும் கவனமும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் ஒட்டு தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த ஒரு படுகொலை வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. அதுவும், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டவுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கம் நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக முழு உலக நாடுகளின் பார்வையும் யாழ்ப்பாணம் மீது திரும்பியுள்ளது. இப்படி பரபரப்பாக பேசப்படும் வழக்கின் பின்னணி என்ன? என்று ஒரு சுறுக்கத்தை பார்க்க வேண்டியுள்ளது.

அந்த வகையில், கொடூரமான படுகொலைகள் மற்றும் கற்பனைக்கு எட்டாத சில படுகொலைகளை நாம் சினிமாவில் தான் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் அதனையும் மிஞ்சும் வகையில் ஒரு கொடூரமான கொலை எம் ஈழ மண்ணில் இடம்பெற்றது.

ஆம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திதி திகதி பாடசாலைக்கு சென்ற புங்குடுதீவு மாணவி வித்தியா மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அஞ்சமடைந்த தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், இந்த முறைப்பாட்டை பொலிஸார் அலட்சிய கண்ணோடு பார்த்திருந்தர். இதனை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் கூறியிருந்தார்.

(புங்குடுதீவு வித்தியா காணாமற்போன தினத்தன்று பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும் – 2015 மே மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றிய போது)

இந்நிலையில், தனது மகள் மீண்டும் வருவார் என்று எதிர்பார்பில் இருந்த தாய்க்கு கிடைந்த செய்தியோ வேறு. தான் பெற்ற மகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வழங்கப்பட்டது.

இந்த செய்தியானது மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பரவ ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்க தொடங்கியது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு விளக்கமறியல் தொடர்ந்தும நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “வித்தியா படுகொலை வழக்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அப்போதைய பிரமத நீதியரசர் கே.ஶ்ரீபவனும் யாழ்ப்பாணத்திற்கு சென்று சட்டதரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடல் இடம்பெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணகளை ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார் நடத்தியதுடன் இறுதிக்கட்ட விசாரணைகளை நீதவான் மொஹமட் றியாழ் நடத்தினார்.

அந்த வகையில், வித்தியா படுகொலை தொடர்பில் ஒவ்வொரு தவனைகளின் போதும் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மாணவி வித்தியாவின் வீட்டுக்குச் சென்று தகவல் திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே 10ஆவது சந்தேகநபர் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் மேலும் இருவரை கைது செய்திருந்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராகுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் ஏனைய ஒன்பது சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. மேல் நீதிமன்றில் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் ஜூரி சபை அல்லாத மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் விளைவாக வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் ஒன்றை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்தார்.

இதன்படி, வித்தியா படுகொலை வழக்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி ட்ரயலட்பார் தீர்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டது. இதன் போது பல்வேறு திடுகிடும் தகவல்கள் வந்தன.

தொடர்ந்தும் இந்த படுகொலை வழக்கு ட்ரயலட்பார் தீர்பாயத்தில் தொடர் விசாரணை செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டதுடன், அரசியல்வாதிகளின் பெயர்களும் அடிப்பட தொடங்கின.

இந்த வழக்கு விசாரைணை தீவிரம் பெற்ற நிலையிலேயே அண்மையில், யாழ். மேல் நீதிபதி நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயலட்பார் தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தொகுப்புரைகள் இடம்பெற்றன.

தொகுப்புரையின் போது வித்தியாவின் படுகொலை வழக்கின் 7 சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, வழக்கின் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் மாணவியைக் கடத்தி து‌ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, இந்த படுகொலை தொடர்பிலான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த படுகொலை தொடர்பான தீர்ப்பை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

அந்த வகையில் இன்னும், சில மணி நேரங்களில் இந்த படுகொலை வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like