சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம்!

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இலங்கை அரச படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பில் சர்வதேச நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தி நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை மிகவும் இழிவான கோரிக்கையாகும். இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது நாட்டுக்கும் இனத்திற்கும் பாதகமானது.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முனைப்புக்களை பாதிக்கும் வகையில் இந்தக் கோரிக்கை அமைந்துள்ளது.

ஆளும் கட்சியின் அமைச்சர்களோ அல்லது வேறும் எவரோ இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

You might also like