சற்று முன் வவுனியா மன்னார் வீதியில் பாரிய விபத்து : ஒருவர் காயம்: ஒருவர் கைது

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று (21.01.2017) மதியம் 2.00 மணியளவில் பாரிய  விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மன்னார்  வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயனித்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை முச்சக்கர வண்டி ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் கனரக வாகனத்தின் பிற்பகுதியில் மோதுண்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள வாகன திருத்தல் தளத்தில் பணி புரியும் ரூபன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளனதால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்திய குற்ற சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like