கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த பேருந்து : முதியவர் படுகாயம்

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று, கடைக்குள் புகுந்தமையால் குறித்த கடை சேதமடைந்துள்ளதுடன், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கனகபுரம் பகுதியில் தேனீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி வைத்த போது, குறித்த பேருந்து உருண்டு கடைக்குள் புகுந்துள்ளது.

இதனால் கடைக்கு பலத்தம் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like