வவுனியாவில் சயிட்டத்தை தடை செய்ய கோரி மாபெரும் போராட்டம்

சயிட்டத்திற்கு எதிரான மாணவ மக்கள் இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (27.09.2017) மதியம் 2.30 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு நடைபவணியோன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர் விடுதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது கோரவப்போத்தானை வீதியுடாக பஜார் வீதியினை வந்தடைந்து மில் வீதியுடாக சூசைப்பிள்ளையார் வீதியினை வந்தடைந்து இரண்டாம் குருக்கு வீதியுடாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்து மணிக்கூட்டு சந்தியுடாக மீண்டும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது.

இலவச கல்வியை பாதுகாப்போம், சயிட்டத்தை தடை செய் , ரயன் ஜெயலத்தை விடுதலை செய் , இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தினையும் அழிக்கும் சயிட்டதை ரத்து செய் என பல்வேறு பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரி சங்கம் , இலங்கை ஆசிரியர் அதிகாரிகள் சங்கம் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு , அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி சங்கம்  என பல அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like