வவுனியாவில் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணி வெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் சேட் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று  (27.09.2017) காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இருவருக்கு வாழ்வாதாரத்திற்கான தலா 25000 ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மாறாஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் கண்ணன் மதி , ஒலுமடுவில் வசிக்கும் யோகேஸ்வரன் விக்னேஸ்வரி ஆகியோருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சேட்நிறுவனத்தின் உளசமூகநிகழ்ச்சித்திட்டத்தினைச் செயற்படுத்தும் களப்பணியாளர்களும் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் சேட் நிறுவன களப்பணியாளர்களான திருமதி ஜெரின் திருமதி அ.தயாளினி, திருமதி ஜெ. நிர்மலா திருமதி ச.சுஜாதா,திருமதி உ.மரியகொன்சி வவுனியா மக்கள் வங்கியின் சிரேஸ்ட உத்தியோகத்தர் திரு ப. நந்தகுமார், மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன், செல்வி கலைவாணி , திருமதி கோமளா மற்றும் ஆசிரியர்களான திரு. கோபு, திரு. ஸ்ரீபகவான் வெளிச்சம் பவுண்டேசன் தலைவர் திரு. லம்போதரன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களை ஆபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பிலும் சேட் நிறுவனம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .

You might also like