கிளிநொச்சியில் நிரந்தர வீடுகளின்றி பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் மக்களின் கோரிக்கை

கிளிநொச்சி – கண்டாவளை, கல்மடுநகர் பகுதிகளில் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்கின்ற குடும்பங்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின், கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கல்மடுநகர் பகுதியில் இதுவரை வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளாமல் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றோம்.

இவ்வாறு வாழ்ந்து வருவதனால் விச ஜந்துக்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதுடன், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களை பாதுகாப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கவனமெடுத்து வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like