பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள கிளிநொச்சி கால்நடைப் பண்ணையாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் உருவாக்கப்படாமையினால் இந்த ஆண்டும் கால் நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த மாவட்டத்தில் வாழும் 80 வீதமான மக்கள் வாழ்வாதாரத் தொழிலான விவசாயமும், கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இல்லாத நிலையில் பயிர் செய்கை காலங்களில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இந்த ஆண்டும் காலபோகச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதனால் கால்நடைப் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை பராமரிப்பதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பிரதேச செயலக ரீதியாக மேய்ச்சல் தரவைகள் நிலங்களை ஒதுக்கி மேய்ச்சல் தரவைகளை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், இதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

மேய்ச்சல் தரவைகள் அடையாளம் காணப்படுகின்றன. வன இலாகாவிடம் இருந்து விடுவிப்பதற்கு மற்றும் மேய்ச்சல் தரவைகளை அமைப்பதற்கான நிதி மூலங்களைத் தேடுதல் போன்றவற்றில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 

இதனால் மேய்ச்சல் தரவைகளை உருவாக்குவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.அத்துடன், எதிர்வரும் மாதங்களில் காலபோகப் பயிர்ச்செய்கைள் ஆரம்பிக்கப்படுகின்ற போது வயல் நிலங்களில் வைத்து பராமரிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றதாக இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like