குழாய்க் கிணறுகளை புனரமைத்துத்தருமாறு கிளிநொச்சி மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்க் கிணறுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே, கோணாவில் மற்றும் கெங்காதரன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குழாய்க் கிணறுகளை புனரமைத்துத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்ள கோணாவில், கெங்காதரன் குடியிருப்பு, கல்மடுநகர், அக்கராயன் ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறுகளில் பல கிணறுகள் பழுதடைந்துள்ளன.

இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற குழாய்க் கிணறுகளை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த போதும், நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like