யாரென்று தெரிகின்றதா? வித்தியாவின் அரிய புகைப்படங்கள்!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை வழக்கின் தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்றில் வைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு இன்று அறிவித்துள்ளது.

இதன் போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வித்தியா துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பல கனவுகளுடன் வாழ்ந்து வந்த வித்தியா படுகொலை செய்யப்பட்ட நாள் முதல், இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் (சிறு வயதில் எடுக்கப்பட்டுள்ள) அரிய புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

You might also like