வவுனியா ஏ9 வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய வளாகத்தினுள் இருந்த பழமை வாய்ந்த மரமோன்று இன்று (28.09.2017) மதியம் 2.00மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் ஏ9 வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது.

இதனால் தொலைபேசி, மின்சார இணைப்புகளின் வயர்கள் அறுந்து வீழ்ந்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மின்சாரசபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த போதும் இது வரை சம்பவ இடத்திற்கு எவரும் வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களின் உதவியுடன் வீதியில் போக்குவரத்துக்கு இடையூராகவிருந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு வீதியின் அருகே போடப்பட்டுள்ளது.

You might also like